என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….
புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது
******
ஓ பாவிகளே
மனந்திரும்புங்கள்!
நீங்கள் கனவான்கள்
என்றுதான் அழைக்கப்படுகிறீர்கள்
ஆனால்…..
கனவீனங்களை மொத்தமாய்க்
குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்கள்
*******
உங்கள் இதய வீட்டை
உற்றுப் பாருங்கள்
பொறாமைத் தூசியால்
நிறைந்திருக்கிறது
ஓர் அறை
ஆபாசக் குப்பைகள்
குவிந்து கிடக்கிறது
மற்றோர் அறை
******
சுவரெங்கும்
சிந்திக் கிடக்கிறது
வட்டிக்கு வாங்கினவர்களின் இரத்தம்
உங்கள் பீரோக்களுக்குள்
அடைந்து கிடக்கிறது
ஆயிரமாயிரம் ஆத்மாக்களின்
பிராணன்கள்
பாத்திரங்களாகிப் போன
பத்திரங்களுக்குள்ளே
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உடைந்து கிடக்கிறது
உயிர்த்துளிகள்
******
உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
மறைந்து கிடக்கின்றன
ஏழைகளின் ஆடைகள்
உங்களுக்கு பசியாற்ற வந்தனர்
தாய்மார்கள்
பட்டினிக் கிடக்கின்றன
அவர்களின்
பச்சிளங்குழந்தைகள்
பாவாடை நாடாக்களில்
ஊஞ்சல் கட்டியாடுவதை
பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
குழந்தைகளின் கதறல்
கேட்கவா போகிறது?
என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….
******
புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது
ஓ பாவிகளே!
மனம் திரும்புங்கள்
உங்கள் மூட்டைப்பூச்சி வேலைகளை
நிறுத்தும் காலம்
இதோ வந்துவிட்டது!
அழுகிப்போன உங்கள்
இதயங்களை
அறுவைச் சிகிச்சை
செய்யும் காலம்
இதோ வந்துவிட்டது!
புது வருடம் பிறக்கிறது
புது யுகமும் பூக்கிறது
என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா …
******
இனியாவது
உங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துங்கள்
அழுக்கு வருடங்களை
அகற்றிப் போடுங்கள்
முகமூடிகளை அகற்றிவிட்டு
முகங்களை
அணிந்துகொள்ளுங்கள்
கண்ணாடி உருவங்களை
கல்லெறிந்து உடைத்துவிட்டு
முகமுகமாய்
தரிசனமாகுங்கள்
காலப்புத்தகத்தில்
உங்கள்
தண்ணீர் எழுத்துக்களை
அழித்துவிட்டு
கல்லெழுத்துக்களை
பொறியுங்கள்
ஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்
புது வருடம் பிறக்கிறது
புதுயுகம் பூக்கிறது
என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….
டிஸ்கி:
நான் பதிவெழுத வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வந்தது எனக்கு பெருமகிழ்சியைத் தந்தது. மேலும் பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. அவற்றை எனது 100-வது பதிவில் தெரிவிக்கிறேன்.
இதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வருகைதந்து, வாக்குகள் இட்டு, பின்னூட்டமிட்டு, ஆதரவு தந்த பதிவர்கள் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !.
.
Tweet | |||||
கண்ணாடி உருவங்களை
ReplyDeleteகல்லெறிந்து உடைத்துவிட்டு
முகமுகமாய்
தரிசனமாகுங்கள்...
அருமை..
புத்தாண்டு வாழ்த்துகள்..
த.ம-1
///பாவாடை நாடாக்களில்
ReplyDeleteஊஞ்சல் கட்டியாடுவதை
பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
குழந்தைகளின் கதறல்
கேட்கவா போகிறது? ////
என்ன ஒரு அமைதிச் சாடல்..
வார்த்தைகளின் தீவிரம் குறைவாக இருந்தாலும்
அதன் வீச்சு குத்திக் கிழிக்கும் விதமாக..
இது எனக்கு பிடித்த வரிகள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 2
முரசடித்துச் சொல்லும் விசயங்கள் அனைத்தும்
ReplyDeleteஅருமையானவை
அனைவருக்குமானவை பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
த.ம 3
உங்களின் பறை முழங்கிய வரிகள் அனைத்தும் நிதர்சனம். அருமை. மனதில் பல உணர்வுகளை எழுப்பின துரை. நன்று. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதட்டி எழுப்புங்கள், விடியட்டும் இந்த புது வருடத்திலாவது
ReplyDeleteபுதிய வருடத்தைச் சுத்தமாக்க வரவேற்கச் சத்தமான பறை.நிச்சயம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள் டானியல் !
ReplyDeleteஅருமை...அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
//ஏழைகளின் கண்ணீர்
ReplyDeleteதுடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்//
புத்தாண்டுக்கு தங்கள் சமூக அக்கறை மிகுந்த கவிதை,நன்று
சாட்டையடியோடு புத்தாண்டு வரவேற்ப்பு
ReplyDeleteஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்
அனைவரும் உணரட்டும்
தங்களுக்கும் ,தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
ஏழைகளின் கண்ணீர்
ReplyDeleteதுடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்
>>
யோசிக்க வேண்டிய விஷயம் சகோ
அருமை.
ReplyDeleteஎங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே..
ReplyDelete@ Mathumathi
ReplyDelete@ Mahendran
@ Ramani
@ Ganesh
@ Hema
@ Shanmugavel
@ M.R. @ Ramesh
@ Raji
@ Rathnavel
@ Munaivar
Gunaseelan
Thangal anaivarin Varugaikkum Pakirvukkum mikka Nanri. Anaivarukkum enathu manam kanintha Puththaandu Vaalthukkal.
@ Surya Jeeva
ReplyDeleteThangalai anbodu varaverkiren. Thangal muthal varugaikkum arumaiyana karuthuraikkum mikka nanri Sago.
@ Nandu @ Norandu
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum Nanri Sir.
@ Suryajeeva
ReplyDelete//தட்டி எழுப்புங்கள், விடியட்டும் இந்த புது வருடத்திலாவது //
- அதற்காத்தான் தட்டி எழுப்புகிறேன் சகோ. தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஏழைகளின் கண்ணீர்
ReplyDeleteதுடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்
வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ
ReplyDelete@ Sasikumar
ReplyDeleteVarugaikkum Pakirvukkum Nanri Sago.
@ Tamilraja
ReplyDeleteThangal muthal varugaikkum Pakirvukkum Nanri Sago.
@ Raji
ReplyDeleteNanri Sago. Thangalukkum enathu iniya Puththaandu Vaalthukkal.
கல்லடி கொடுக்காத்தை இந்தச் சொல்லடி கொடுக்கவேண்டும். அப்பாவிகளின் வாழ்வு பறிக்கும் அப்பாவிகளின் ஆடம்பர வாழ்வைப் பறிக்க வேண்டும். அருமையான ஆழ்மன வெளிப்பாடு.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//////உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
ReplyDeleteமறைந்து கிடக்கின்றன
ஏழைகளின் ஆடைகள்
ஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்//////////////
ஆழமான வரிகள்...............வாழ்த்துக்கள் தோழரே...