Tuesday, December 13, 2011

நல்ல வியர்வையும் கெட்ட வியர்வையும் (Healthy Sweat and Unhealthy Sweat)– ஒரு மருத்துவரீதியான அலசல்.

வியர்வையில் கெட்ட வியர்வை நல்ல வியர்வை என்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். பதில் ஆம் இருக்கிறது என்பதுதான். இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம். உங்கள் முதுகு மற்றும் மார்பு இவற்றைவிட உங்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், நெற்றி ஆகிய இடங்களில் மிகுதியான வியர்வை சுரப்பிகள் உண்டு. வயதாகும்போது முதலில் முதுமை அடையும் வியர்வைச் சுரப்பிகள் நம் கால்களில் உள்ள வியர்வை சுரப்பிகளாகும். வெப்பமான இடங்களில் அல்லது நேரடியாக சூரியஒளி தாக்கும் இடங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்கள் கால்களில்தான் முதலில் வெப்பத்தை உணருகிறார்கள்.

கடுமையான சூரியஒளித் தாக்குதல் மூலம் நம்முடைய கால்களில்தான் முதலில் தாக்குதல் உண்டாகி வலியும் அயர்ச்சியும் ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சி முடிவு இப்படி கூறுகிறது. 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீராவிக்குளியல் அல்லது வெந்நீர்க் குளியல் எடுப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக வியர்க்கிற தன்மையை அடைந்தார்கள் என்று.
அவர்களின் வியர்வைத்துளிகளை கிண்ணங்களில் பிடித்து உலர வைத்தபோது சிலருடைய வியர்வைத்துளிகள் விரைவில் உலர்ந்து விட்டதாகவும், சிலருடைய வியர்வைத்துளிகள் உலராமல் வெகுநேரம் ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சி சொல்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்?

மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
ஒருவருக்கு எப்படி வேர்க்கிறது என்பது அவருடைய உடல்நலத்தின் தன்மையை காண்பிக்கிறது. அவருடைய உடலின் நீர்த்தன்மையானது எப்படி அவருடைய தோலினால் சமன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அவருடைய உடலின் ஆரோக்கியத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்தும் ஒருவருக்கு சரியாக வேர்க்காதே போனால் அவருடைய உடல் ஆரோக்கியம் கெட்டிருக்கிறது என்பதுதான் பொருளாகும். அவருடைய வேர்வையில் உள்ள அமிலமானது நீர்த்தன்மை இல்லாமல் கெட்டிப்பட்டு விடுவதுதான் இப்படி வேர்க்காமல் போவதற்கான காரணமாகும். அதாவது அவருடைய தோல் மற்றும் உடல் இயக்கம் அவருடைய உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது.

கெட்ட வியர்வை என்பது அதிகமான அமிலத்தையும், கொழுப்பையும் கொண்டிருக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு சூரிய ஒளியினால் அல்லது வெப்பத்தினால் மரணடைகிறார்கள். நீங்கள் வெப்பம் மிகுந்த நாட்டில் அல்லது இடத்தில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு வியர்க்க வேண்டும். இந்த உடலின் செயலானது (Body Mechanism) நம்முடைய மூளையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நம்முடைய மூளையானது தோலினருகில் அமைந்திருக்கும் வியர்வைச் சுரப்பிகளின் மூடித்திறத்தல் வேலையைக் (Close and Open) கட்டுப்படுத்தி அமிலத்தை சுரக்கவைத்து வியர்வையாக மாற்றி தோலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. வியர்க்காத மனிதர்களின் உடலில் இந்த வியர்வை இயக்கத்தில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தமாகும். கெட்ட வியர்வையினால் இரத்தமானது கெட்டிப்பட்டு விடுகிறது. நம்முடைய இரத்தத்தில் மற்றும் உடலில் சுரக்கும் மற்ற திரவங்களில் கடல் நீரில் உள்ளதைப்போலவே உப்பு கலந்த தண்ணீர் உள்ளது. இந்த உப்பானது நம்முடைய தசைகளும் மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க அவசியமாகும்.

நமக்கு சுளுக்கு ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

நம்முடைய உடலில் இந்த உப்புத்தன்மை போதுமானதாக இல்லாத சமயங்களில்தான் இந்த சுளுக்கு ஏற்படுகிறது. நம்முடைய இரத்தத்தில் உள்ள பொருட்களின் சேர்மானங்களின் அளவை இந்த உப்புதான் கட்டுப்படுத்துகிறது. இந்த உப்பின் அளவு மிகவும் அதிகரிக்கும்போதும் பிரச்சினை ஏற்படுகிறது. இதன் அளவு மாறுபாடுதான் தேவையில்லாத இரசாயனப் பொருட்களை இரத்தத்தில் அதிகளவு உற்பத்தி செய்துவிடுகிறது.

சிலருக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்க மறுக்கிறது. காரணம் இந்த உப்புத்தன்மை அளவு மாறுபடுவதுதான். தண்ணீர் குடித்தாலும் அதை நம் உடல் உட்கிரகிக்க முடியாமல் போவதால் தண்ணீர் அதன் வேதிப்பொருட்களோடு நம்முடைய சிறுநீராக மாறி சிறுநீர்த்துவாரம் மூலமாக வெளியேறுகிறது. நம்முடைய உடலானது ஒழுங்காக வியர்வையை சுரக்குமானால் வியர்வை சுரப்பிகள் குடிக்கும் தண்ணீரிலிருந்து உப்பை ஒழுங்காக உறிஞ்சி விடுகின்றன. அந்த உப்புதான் வியர்வை வெளியேறுவதை நிர்ணயிக்கிற சமாச்சாரமாய் இருக்கிறது.

எல்லாம் ஒழுங்காய் நடக்கும்போது வியர்வை மட்டும் நீர் போல வியர்வைத்துவாரங்கள் மூலம் நம் தோலில் வெளியேறுகிறது. இது நல்ல வியர்வையாகும்.

மாறாக இதில் கோளாறு ஆகும்போது உடலில் உள்ள வேறு இராசயன கூட்டுப்பொருட்களும் (Various Salt Compounds and other Minerals) வியர்வையோடு சேர்ந்து வியர்வைத் துவாரங்களின் வழியாக வெளிவருகிறது. இதுவே கெட்ட வியர்வை எனப்படுகிறது.


சரி. இந்த வியர்வைக் கோளாறை அதாவது கெட்ட வியர்வையைத் தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

ஆம். இருக்கிறது. மிக எளிதான வழிதான் மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. உடற்பயிற்சிதான் அந்த வழி. கடுமையான உடற்பயிற்சிகள் அல்ல. எளிதான ஆனால் உடல் வேர்க்கும்படியான நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ தினமும் 20 அல்லது 30 நிமிடங்கள் செய்தால் போதும் இந்த கெட்ட வியர்வை நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.

கெட்ட வியர்வை நாற்றங்கள் உள்ளவர்கள் இவ்வாறு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மாற்றம் தெரியும். உடற்பயற்சி செய்து முடித்த உடனேயே வெளிவரும் வியர்வையைக் கவனியுங்கள். முதலில் கொழுப்பு போல நிறமுடைய கெட்ட வியர்வை எண்ணெய் போன்று வெளியேறும். நாளாக நாளாக வியர்வையின் நிறம் மாற ஆரம்பிக்கும். நாளடைவில் சுத்தமான தண்ணீர் போன்று நிலைமை வருகிற வரைக்கும் நீங்கள் உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். (அதன் பிறகும் தொடர்ந்தாலும் நல்லதுதானேங்க.). கொழுப்பும் குறையும். தொந்தியும் குறையுமல்லவா? உடற்பயிற்சியினால் எவ்வளவு நன்மை பார்த்தீர்களா? இன்றைக்கே தொடங்கி விடுங்கள்.

கெட்ட வியர்வையோடுதான் வாழுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் அவ்வளவுதான். நாளடைவில் இரத்தத்தின் உப்பைக் கட்டுப்படுத்துகிற தன்மை மாறுகிறதினால் ஹார்ட் அட்டாக் வர மிகுந்த வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் சூரிய ஒளித்தாக்குதலினால் மரணமடைகிறார்கள். இப்போது காரணம் புரிகிறதா?

“ வியர்வை சாதாரணமானதல்ல. அது நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி” என்பதை ஒருநாளும் மறவாதிருங்கள்.

நலமுடன் வாழ்க!.
.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

24 comments:

  1. வியர்வை பற்றி மிகவும் உபயோகமான பதிவு.பலபேருக்குப் பிரயோசனப்படும் !

    ReplyDelete
  2. அருமையான, பயனுள்ள பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வியர்வை சாதாரணமானதல்ல. அது நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி” என்பதை ஒருநாளும் மறவாதிருங்கள். // சாதாரணமா எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. அடேடே... வேலை செஞ்சா, ஓடினா சாதாரணமா வியர்க்கும்னுதான் நெனச்சுட்டிருந்தேன். அதுல இத்தனை விஷயங்கள் இருக்கா..? நல்ல விஷயங்கள், பயனுள்ள பகிர்வு. மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  5. உண்மை, இதை நான் தினமும் உணர்கிறேன்.
    மிகப் பயனான தகவல்

    ReplyDelete
  6. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. @ Vedanthangal Karun.

    Varugaikkum pakirvukkum Nanri Sago.

    ReplyDelete
  8. @ Ganesh.

    Thangal muthal varugaikkum arumaiyana karuthuraikkum mikka Nanri Sago.

    ReplyDelete
  9. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு!நன்றி!

    ReplyDelete
  10. அருமையான தகவல் நண்பரே

    ReplyDelete
  11. வியர்வை பற்றிய அருமையான
    விளக்கங்கள் நண்பரே.
    சுளுக்கு பற்றி நீங்கள் சொன்னது
    இப்போது தான் நான் அறிகிறேன்..
    பகிர்வுகளுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  12. இதுவரை அறியாத அரிய தகவல்களை
    அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவலகளை
    பதிவாக்கித் தந்தமைக்கு நனறி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 9

    ReplyDelete
  13. அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பகிர்வு. நன்றி

    ReplyDelete
  14. மகேந்திரன் - சொன்னது //வியர்வை பற்றிய அருமையான
    விளக்கங்கள் நண்பரே.
    சுளுக்கு பற்றி நீங்கள் சொன்னது
    இப்போது தான் நான் அறிகிறேன்..
    பகிர்வுகளுக்கு நன்றிகள் பல... //

    அப்படியா. நன்றி சகோ. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  15. மோகன்குமார் - சொன்னது
    //அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பகிர்வு. நன்றி //

    - நன்றி சகோ. தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  16. அருமையான பயனுள்ள பதிவு!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஃஃஃஃஇந்த வியர்வைக் கோளாறை அதாவது கெட்ட வியர்வையைத் தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?ஃஃஃஃ

    அருமையான பதிவு சகோதரம்...

    இது முதலாளிகளுக்கே கட்டாயம் அவசியமான பதிவு சகோதரம்...

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.