வெறிநாய்கள் வெளியில் இல்லை
உள்ளேயே இருக்கிறது
வேட்டை நாய்கள் புறத்தில் இல்லை
அகத்திலேயே இருக்கிறது
கடித்து கடித்து குதறி
கடைசியில்
தோல் கிழிந்து
நிர்வாணமாய் நிற்கும் போதுதான்
நிதர்சனம் உரைக்கிறது
இந்த பாழும் மனதுக்கு
முற்றின பிறகு
ஞானம் வந்து எதற்கு
இன்றே
இளமை இருக்கும் போதே
விஷம் வைத்து
நாய்களைச் சாகடி
முதுமையில்
உலகம் உன்னை நிமிர்ந்து பார்க்கும்.
.
Tweet | |||||
இனிய வணக்கம் நண்பரே...
ReplyDeleteநீண்ட நாட்கள் உங்களைக் காணமுடியவில்லை.
நானும் கடந்த ஒருவருடமாக எழுதுவது குறைந்துவிட்டது.
நலம் தானே நண்பரே...
========================
நன்றே செய்வோம் - அதுவும்
இன்றே செய்வோம் என விளம்பும் பதிவு அருமை....
வாங்க சகோ. மகேந்திரன் அவர்களே. நல்லாருக்கீங்களா? ஆமா சகோ. பார்த்து ரொம்ப நாளாச்சு. இனி கொஞ்சம் அப்பப்ப எழுதலாம்னு பார்க்குறேன். பார்க்கலாம். எல்லாம் இறைவனின் கையில். கருத்துரைக்கு நன்றி.
Deleteஆவ்!...ஆவ்! ரெம்பக் கடினம்....
ReplyDeleteஆம் புரிகிறது...அனுபவம்!..
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோ. இலங்கா திலகம்.
Delete