மகுடம்
சூடும் ஒவ்வொரு முறையும்
ஆணவப்
பூ பூக்கும்
அந்தப்
பூவுக்குள்தான்
அழிவு
நாகம் குடியிருக்கும்
மகுடம்
சூடும்போதெல்லாம்ி
தாழ்மைத்
தொப்பி அணிந்துகொள்
அதுதான்
நீ விழும்போதெல்லாம்
உன்னைக்
காக்கும்
கொடிக்
கொம்பு
செருக்கில்லாத
வண்டிதான்
சீக்கிரம்
ஊர் போய்ச் சேரும்
இதை
மறவாத வரை
வெற்றி
உன்னைத் தொடரும்.
..
Tweet | |||||
அருமை...
ReplyDeleteஆணவம் அனைத்தையும் அழிக்கும்...
நன்றி சார்.
ReplyDeleteநல்ல அறிவுரை.....
ReplyDeleteத.ம. +1