Sunday, February 19, 2012

கறுப்பு சந்தைகள்

என் முட்டைகளை
அடைகாத்து அடைகாத்து
மூச்சு முட்டுகிறது
எனக்கு

வெளிவராத என் மவுனங்களிலும்
சக்கர எண்ணங்களிலும்
அழுகித்தான் போகின்றன
ஆயிரம் முட்டைகள்

பொரிக்காத என்
முட்டைகளின் கனம்
கூடிக்கொண்டேதான் போகிறது

பொரித்த முட்டைகள் மட்டும்
விற்று விடுகிறதா என்ன
போகாத சந்தையில்
ஆகாத வீதியில்
ஆளரவமற்று கிடக்கின்றன
என் முட்டைக் கடைகள்

விற்பனைக்கு என்ற
என்
விளம்பரப் பலகையில்
வெற்றுக் காக்கைகளின்
எச்சங்கள்

ஒருநாள் இல்லை ஒருநாள்
என் பெரிய முட்டைகள்
பொரிக்கப்படத்தான் போகின்றன

அன்று....
அந்த
அக்கினிக் குஞ்சுகளின்
ஆசிட் வெள்ளத்தில்
காணாமல் போகப்போகின்றன
இந்த
கறுப்பு சந்தைகள்.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

20 comments:

  1. என்றாவது முட்டைகள் பொரிக்கும் என்ற நம்பிக்கைதான் மனிதனை பல சந்தர்பங்களில் சமாதானபடுத்துகின்றன ......... அருமையான வரிகள் கருத்தாழத்துடன்.....

    ReplyDelete
  2. பொரிக்காத பொன்முட்டைகளை
    அடைகாத்து வைத்திருங்கள்
    பொரிக்கும் நேரம் வருகையில்
    கொழுந்துவிட்டு எரியும் தீ நாக்குகள்..
    பொய்மையிலும் புரட்டுகளிலும்
    பொல்லாத தீய சக்திகளையும்
    பொசுக்கிப்போடும்..

    அருமையான ஆதங்கக் கவிதை நண்பரே.

    இந்த முறை விடுமுறைக்கு தூத்துக்குடி
    வருகையில் தங்களை சந்திக்கிறேன்.

    ReplyDelete
  3. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. @ இடிமுழக்கம்

    - நன்றி.

    ReplyDelete
  5. @ மகேந்திரன்

    - கண்டிப்பாக இந்த முறை நாம் சந்திப்போம். உங்கள் அன்புக்கு நன்றி. ஆதரவிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. @ ரத்னவேல் நடராஜன்

    - தங்கள் வருகைக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. நல்லதொரு கவிதை.வித்தியாசமான ஆதங்கம்..வாசித்தேன் வாக்கிட்டேன்.நன்றி.

    ReplyDelete
  8. அருமையான படைப்பு
    ஒருதரமான படைப்புகளைத் த்ரும்
    படைப்பாளியின் தார்மீகக் கோபமும்
    தன் படைப்புகளின் மீதுள்ள ஆழமான
    அசைக்கமுடியாத நம்பிக்கையையும்
    மிக அழகாகச் சொல்லிப் போகும்
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கையாலாக ஆதங்கம்போல் வரிகள் துவங்கினாலும் ஆவேசத்துடன் வெளிப்படும் ஆணித்தரமான நம்பிக்கையில் முடிவுறுவது பிரமாதம். நெஞ்சக்கனலில் புடம்போட்ட நம்பிக்கைகள் ஒருநாளும் பொய்ப்பதில்லை.பாராட்டுகள்.

    ReplyDelete
  10. விற்பனைக்கு என்ற
    என்
    விளம்பரப் பலகையில்
    வெற்றுக் காக்கைகளின்
    எச்சங்கள்

    ஒருநாள் இல்லை ஒருநாள்
    என் பெரிய முட்டைகள்
    பொரிக்கப்படத்தான் போகின்றன

    அருமைப் கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அந்த
    அக்கினிக் குஞ்சுகளின்
    ஆசிட் வெள்ளத்தில்
    காணாமல் போகப்போகின்றன
    இந்த
    கறுப்பு சந்தைகள்.

    ஆணித்தரமான நம்பிக்கைகள் வெல்லட்டும்..

    ReplyDelete
  12. ''..போகாத சந்தையில்
    ஆகாத வீதியில்...''
    ''..அக்கினிக் குஞ்சுகளின்
    ஆசிட் வெள்ளத்தில்
    காணாமல் போகப்போகின்றன
    இந்த
    கறுப்பு சந்தைகள்...''
    ஓ! ரெம்ப சூடாக இருக்கிறது கோபம்! நல்ல வரிகள் .வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. கொஞ்சம் வெப்பம் கூடிய வரிகள் ..
    நம்பிக்கை வெல்லட்டும் .. வாழ்த்துக்கள

    ReplyDelete
  14. பொரித்த முட்டைகள் மட்டும்
    விற்று விடுகிறதா என்ன
    போகாத சந்தையில்
    ஆகாத வீதியில்
    ஆளரவமற்று கிடக்கின்றன
    என் முட்டைக் கடைகள்
    என்று சோர்ந்து போகாமல்
    அன்று....
    அந்த
    அக்கினிக் குஞ்சுகளின்
    ஆசிட் வெள்ளத்தில்
    காணாமல் போகப்போகின்றன
    இந்த
    கறுப்பு சந்தைகள்.
    வீரிய மிகு வரிகளை தந்த விதம் அருமை .

    ReplyDelete
  15. அப்பாடி...இவ்ளோ கோவம்.கண்டிப்பாய் வேணும் !

    ReplyDelete
  16. அழகான வரிகள்

    வாழ்த்துகள்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.