Tuesday, February 14, 2012

நானும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாட தீர்மானித்துவிட்டேன்




நானும்
இந்த
காதலர் தினத்தைக்
கொண்டாட
தீர்மானித்துவிட்டேன்

முந்நூறு நாட்களாய்....
சுமந்து சுமந்து
பிறை நிலவாய்
இருந்த என்னை
முழு நிலவாய் மாற்றி
பூமிக்கு அனுப்பிய
என் தாய்க்காக....

முப்பது வருடமாய்
என் எச்சில்களை
விழுங்கிக் கொண்டு
அமுதங்களையே பரிசளித்த
என் தந்தைக்காக....

தன் காம்பில்
பூத்திருந்தாலும்
வசந்தங்கள் வரும்போதெல்லாம்
வழிவிட்டு வாழ்வளித்த
என்
சகோதரிக்காக....

புயல் காலங்களிலும்
பூக்காலங்களிலும்
என் இன்னொரு தோளாய்
கூடவே வசித்த
என்
நண்பனுக்காக.....

என் வாழ்க்கை ரயிலோடும்
பாதையிலெல்லாம்
இரட்டைத் தண்டவாளமாய்
கூடவே வருகிற
என்
மனைவிக்காக....

நானும்
இந்த
காதலர் தினத்தைக்
கொண்டாட
தீர்மானித்துவிட்டேன்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

26 comments:

  1. இதே மகிழ்வோடு,நெகிழ்வோடு கொண்டாடுங்கள்,எல்லா நாளும் காதலர்தினம் தான்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி..குதூகலமாக கொண்டாடுங்கள்..

    ReplyDelete
  3. வித்யாசமான காதலர் தின பாடல் கவர்கிறது.

    ReplyDelete
  4. உண்மை தான் அனைவருமே காதலிக்கிறோம். வித்தியாசக் கவிதை வாழ்த்துகள். காதலர் தின வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. அருமை மற்றவரை எண்ணி வாழ்வதே மேல் என்ற உங்கள் பார்வைக்கு வாழ்த்துகள்.அருமையான கவிதை.

    ReplyDelete
  6. ஆஹா...இதுதான் உண்மையான காதலர் தினம்.

    ReplyDelete
  7. கொண்டாடுங்க துரை. நண்பனோட சேர்ந்து நானும் கொண்டாடறேன். எல்லோரும் கொண்டாடுவோம் மகிழ்வாய்...

    ReplyDelete
  8. அருமை அருமை
    காதல் என்கிற வார்த்தையை மிகச் சரியான பொருளில்
    நீங்கள்தான் பயன்படுத்தி இருக்கிறீர்கள்
    மனம்கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை அருமை சகோ

    ReplyDelete
  10. மிக அருமை நண்பரே... எல்லோருக்காகவும் கொண்டாடுவோம்...

    ReplyDelete
  11. @ கோகுல்

    தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  12. @ மதுமதி

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  13. @ ஸ்ரவாணி

    தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  14. @ Kovaikkavi

    தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. தங்களுக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. @ dhanasekaran

    - தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  16. @ ரஹீம் கஸாலி

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  17. @ கணேஷ்

    - ஓ.கே. சார். வாங்க எல்லோரும் கொண்டாடுவோம். நன்றி.

    ReplyDelete
  18. @ ரமணி

    - தங்கள் வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கம் மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  19. @ வேர்கள்

    - தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  20. @ வெங்கட் நாகராஜ்

    - தங்கள் வருகைக்காகவும் அழகான பின்னூட்டத்திற்காகவும் நன்றி சார். சார் தாங்கள் ஒரு பெரியவரின் தளத்தை அறிமுகப்படுத்தினீர்களே. அந்த URL கொஞசம் தாங்க சார். போய் பார்க்கிறேன். அருமையான நபர் அவர்.

    ReplyDelete
  21. அவரது தளத்தின் முகவரி

    http://kanakkayan.blogspot.in/

    ReplyDelete
  22. @ வெங்கட் நாகராஜ்

    - உடனடியாக தள முகவரி தந்ததற்காக மிக்க நன்றி சார். இன்றைக்கே போய் பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  23. எல்லோரிடமும் காதல் இருந்தால்தான் வாழ்வு இனிக்கும்.அதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.அன்பு வாழ்த்துகள் காதலோடு !

    ReplyDelete
  24. @ ஹேமா

    நன்றி ஹேமா! தங்களுக்கும் எனது இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.

    மற்றும் பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.