Tuesday, October 2, 2012

வறுமையின் குணம் சிரிப்பு






பேருந்தில்
அந்த பெண்
எவ்வளவு ஏசியும்
எழவில்லை அந்த சிறுவன்

இடமும் வலமுமான
இடப்பெயர்ச்சி
மேலும் கீழுமாக மாறவில்லை

காரமும் உப்புமாக
பொரிந்த
மசாலாப் பேச்சுகளுக்கு
கவிழ்ந்த பார்வையே பதில்

பொறுத்து பொறுத்துப் பார்த்தவள்
குண்டுக்கட்டாய் தூக்கியபோது
பிருஷ்டத்தில் சிரித்தது
வறுமை.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

22 comments:

  1. Replies
    1. வேதனைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  2. அழகாகவும் நயமாகவும் சொன்னீர்கள் நண்பரே..
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே!

      Delete
  3. அருமை அருமை
    மிகச் சுருக்கமாக
    வடிவம் சிறியது ஆயினும்
    உட்கருத்து பூதாகாரமாய்...
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  4. உண்மை... ஆனால் வறுமை மிக கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. ஆம். கொடுமைதான். நன்றி தனபாலன் அவர்களே!

      Delete
  5. வறுமையின் வழியை அழகாக சொல்லியுல்லிர்கள்

    ReplyDelete

  6. நலமா நண்பரே!நீண்ட நாள் காணவில்லை! வேலை அதிகமோ! சுருங்கச் சொன்னாலும் சுவைபடச் சொன்னீர்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் புலவரய்யா! கொஞ்சநாள் அலுவலக வேலை காரணமாக தொடர்ந்து வர இயலவில்லை. இப்போது கொஞ்சம் ப்ரீயாக இருக்கிறது. அதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

      Delete
  7. ஒருவனின் வறுமையும்
    பிறரின் சிரிப்பு குணமும்
    மனிதனின் யாதார்த்தை தோலிருத்துக் காட்டுகிறது சார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்!

      Delete
  8. படத்தைப் பார்க்கும் போதே கனத்து கண்ணீர் வருகிறது .

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோ? எனக்கும்தான். மெல்லிய இதயம் கொண்டவர் நீங்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      Delete
  9. மிகவும் கொடுமை.
    அதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. ராஜி!

      Delete
  10. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. குட்டன்!

      Delete
    2. படத்துக்கு கவிதையா? கவிதைக்கு படமா? பார்த்தும், படித்தும் உணர்வையிழந்தேன் அண்ணா.

      Delete
    3. அப்படியா ராஜி! அழகான கருத்துரைக்கும் ஆழமான வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.