Friday, April 13, 2012

அர்த்தப் புன்னகை




மனம் நிறைய உற்சாகத்தோடு
கிளம்புகிறேன்
அந்த
நந்தவனத்திற்கு

உள்ளே நுழைகிறேன்....

நலமா என்றது
சூரியகாந்தி
தலையசைத்தபோது
சிரித்தது

நாட்டு நடப்பெல்லாம் எப்படி
கேள்விக்கு பதில் சொல்லும்முன்
இடைமறித்தது
வெள்ளை ரோஜா

அவனை விடு
நாடு மறக்க நாடிவந்தவனுக்கு
ஞாபகப்படுத்தும் படலம் எதற்கு

நேசப்புன்னகை செய்தேன்
கண்ணடித்தது ரோஜா

நீ என் காதலன்
என்ன விரும்புகிறாய்
என்றது

சிவப்பு ரோஜா
எனக்குப் பிடிக்கும்
சீண்டலில் சிவந்தது
வெள்ளை ரோஜா

உன் சிகப்பைக் காணவே
இந்த சீண்டலென்றேன்

அரளியக்கா அழுகிறாள்
புகார் தெரிவித்தன
புற்களெல்லாம்

ஏன் என்ற
என் கேள்விக்கு
ஓவென ஒப்பாரி வைத்தது
நந்தியா வட்டை
பூக்காரி மகள்
பூமிக்கு சொந்தமாகிவிட்டாளாம்
காரணம் தான்தானென்று
குற்ற உணர்ச்சியாம்

அரளிச்செடி பக்கம்
ஆதரவாய்ப் போனேன்
அழுகை நிறுத்து
கண்ணீர்ப்படலம் பூர்த்திசெய்

முகம் திருப்பிய அரளி
உற்று நோக்கியது
ஏன் இந்த மனிதர்கள்
சாக நினைக்கும்போதெல்லாம்
என்னை பயன்படுத்துகிறார்கள்

மற்ற பூக்களுக்கு இல்லாத
இந்த சங்கடம்
எனக்கு மட்டும் ஏன்?

சொன்னால் சங்கடப் படாதே
விஷம் கொண்டுள்ள
பூக்களாயினும் சரி
மனிதராயினும் சரி

ஒவ்வொரு நாவலின்
இறுதி அத்தியாயமும்
அவர்களாலேயே
முடித்து வைக்கப்படுகிறது

தவறு உன்பக்கம்
விட்டுவிடு கவலையை
காலம் மாறும்
கவலைகள் தீரும்

பூச்சிநேகம் கலைத்து
வீடு திரும்பினேன்


காலம் கழிந்தது
அன்றொரு நாள்...
அந்த
ஆட்டு மந்தை
பூங்காவிற்குள் நுழைந்தது

பூப்பறவைகள்
வேட்டையாடுகளால்
குதறப்பட்டன

விவரம் அறியாதவனாக
மாலையில்....
மறுபடியும் நுழைந்தேன்
அந்த
நந்தவனத்தில்....

போர்க்களமாய் இருந்தது
நந்தவனம்...
பூக்களின் கைகளும்
கால்களும்
வெட்டப்பட்டு கிடந்தன

பூக்களின் இரத்தத்தால்
சிவந்திருந்தது
பூமி.....

எல்லாப் பூக்களும்
கல்லறைக்கு சென்றுவிட்டதால்
மயானமாகவே இருந்தது
பூந்தோட்டம்

கண்ணீருடன் அலைந்தபோதுதான்
காதுகளில் கேட்டது
பழக்கப்பட்ட குரலொன்று
யாரென திரும்பியபோது
அரளிப் பூ...

வெகுநேரம் உரையாடினோம்
விடைபெறும்போது தெரிந்தது
அரளியின் கண்களில்
அந்த
அர்த்தப் புன்னகை.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

13 comments:

  1. அர்த்தங்கள் சொல்லும் அருமையான
    ரெம்ப அற்புதமான கவிதை சார்

    ReplyDelete
  2. மிகக் கருத்துடை கவிதை.
    வித்தியாசக் கரு.
    வாழ்த்துகள்.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. மனப் பூவில் மலர்ந்த ந்ந்த வனம்! அருமை! சா இராமாநுசம்

    ReplyDelete
  4. கவிதை ‌சொல்லிய கருத்து அருமை. மிகவே வித்தியானமான சொல்லாடல்! நன்று துரை.

    ReplyDelete
  5. படைப்பின் ரகசியம்.....
    "எல்லாம் நன்மைக்கே" என்று
    சொல்லத் தோன்றுகிறது...

    நந்தவனத்தை இணையத்துள் கொணர்ந்து
    அருமையான வாழ்வியல் தத்துவத்தை
    சொல்லியிருக்கிறீர்கள்..

    அருமை அருமை..

    ReplyDelete
  6. அரளிப் பூவின் அர்த்தப் புன்னகையா
    குரூரப் புன்னகையா
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல கவிதை....

    படைப்பின் ரகசியம் புரிந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் புரிந்து கொளவதில் தானே கஷ்டம் இருக்கிறது!

    ReplyDelete
  8. நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் உங்களின் எழுத்தில் பூத்த கவிதையாகிவிட்டது எல்லாப்பூவும் ஒரு முறை மீண்டும் பார்த்தேன் கவிதையில்.

    ReplyDelete
  9. nanthavanam!

    azhinthathau nonthathu-
    manam!

    ReplyDelete
  10. @ செய்தாலி
    @ Kovaikkavi
    @ புலவர் சா இராமாநுசம்
    @ கணேஷ்
    @ மகேந்திரன்
    @ ரமணி
    @ வெங்கட் நாகராஜ்
    @ தனிமரம்
    @ Seeni

    - வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. விரிவான அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டவர்களுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்.

    ReplyDelete
  11. பூவோடு கூடிய புரிதல் அருமை .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.